மத்திய, வடக்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

 

கோவை, ஜூலை 6: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மத்திய மண்டலம் நஞ்சுண்டாபுரம் சாலை, ரயில்வே பாதை அடிப்பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம்-நல்லாம்பாளையம், ஜெய் நகரில் உள்ள ரயில்வே பாதை அடிப்பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்தார்.

இப்பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, மத்திய மண்டலம் சுங்கம் வரி வசூல் மையத்தில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, எழில், மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, சூயஸ் குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நாகராஜ், ரவிக்கண்ணன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குனர் சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது