மத்திய பஸ் நிலையம் அருகே திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் நடைபாதை: பொதுமக்கள் கடும் அவதி

 

ஊட்டி, ஜன.29: ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே அருகில் உள்ள நடைபாதை அசுத்தமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் முனிஸ்வரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் எட்டின்ஸ் சாலைக்கு செல்ல சிறு நடைபாதை உள்ளது. எட்டின்ஸ் சாலையில் நடந்து வரும் மக்கள் பெரும்பாலானோர் இந்த வழியாக பஸ் நிலையம் செல்வதற்கு பயன்படுத்துவர்கள்.

இந்நிலையில் பஸ் நிலையம் அருகேயுள்ள நகராட்சி கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பலரும் இந்த நடைபாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இந்த நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே நடைபாதையை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி