மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடர விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

வலங்கைமான், பிப். 2: நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை பெறுவது சமம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ரோஸய்யா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவரும் மற்றும் பல்கலை க்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர் கலந்து கொண்டார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மாணவர்கள் எளிமையாக பெரும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளும் உள்ளன.

அதனை பெறுவதற்கான வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இந்த மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் உயர் கல்வியை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அருகாமையில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தை மாணவ,மாணவிகளின் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார். பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11, 12 ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதுநிலை புவியியல் துறை ஆசிரியை கோமதி நன்றி கூறினார். இப்பள்ளியின் முதுநிலை கணினி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளருமான விஜயன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு