மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறை: காற்றோட்ட வசதி பரவலை கட்டுப்படுத்தும்: 30 அடி தூரம் கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்கும்

புதுடெல்லி: நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களில், காற்றில் பரவும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் பரவல் அபாயத்தை கட்டுப்படுத்தும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்  புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இந்திய வகை இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் மிக வீரியமிக்கதாக இருப்பதால் காற்றில் எளிதாக பரவுகிறது.  இதை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளுடன் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.‘பரவலை கட்டுப்படுத்துவோம், தொற்றுநோயை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் காற்றோட்ட வசதி முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.< வைரசால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவுவதை காற்றோட்ட வசதி பெருமளவு தடுக்கும்.< கதவு, ஜன்னல்கள் திறப்பது, எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்துவது மூலம் அறைகளில் உள்ள துர்நாற்றம் வெளியேறுவதைப் போல, காற்றோட்ட வசதிகள் மூலம் அறைகளில் காற்றில் கலந்திருக்கும் வைரஸ் நுண்துகள் வெளியேறி  பரவும் அபாயம் குறையும்.< காற்றோட்ட வசதியே வீட்டிலும், பணியிடத்திலும் நமக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும்.< வீடு, அலுவலக அறைகளில் வெளிக்காற்று வரும் வகையில் ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.< அறிகுறிகளைக் காட்டாத நபர்களும் வைரஸ் தொற்றைப் பரப்பலாம்.< பாதிக்கப்பட்ட நபரின் நுண்ணிய நீர்த்துளிகள் 30 அடி தூரம் வரை காற்றில் பயணிக்கக் கூடும்.< எனவே, முககவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி அடிக்கடி பயன்படுத்துதல் அவசியம்.< இரட்டை மாஸ்க் அல்லது என் 95 மாஸ்க் அணிதல் அதிக பாதுகாப்பு அளிக்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு