மது விற்ற 13 பேர் கைது

 

ஈரோடு, செப். 1: ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய ரெய்டில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மற்றும் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நடத்திய ரெய்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரம், எம்ஜிஆர் வீதியை சேர்ந்த குப்புசாமி (64), ஊஞ்சலூர் அண்ணாநகர் ஸ்ரீதரன்(44), புதுக்கோட்டை மாவட்டம் ஆறுமுகம்(42), மதுரை காதகிணறு பகுதியை சேர்ந்த ரவி(55), வீரப்பன்சத்திரம் குமார்(43), சூரம்பட்டி சண்முகம்(46), புதுக்கோட்டை ராமநாதன்(49), சூரம்பட்டி குப்புசாமி(49), வீரப்பன்சத்திரம் புஷ்பகுமார்(37), சங்ககிரி கணேசன்(41), பவானி ஜம்பை கோபாலகிருஷ்ணன்(47), நம்பியூர் செல்வராஜ்(40), குன்னத்தூர் ரமேஷ்(43) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்