மது விற்ற 11 பேர் கைது

தர்மபுரி, டிச.24: தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, தர்மபுரி மற்றும் அரூர் உள்பட மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு