மது, புகையிலை இல்லாத தமிழகமாக மாற்றுவதே எனது லட்சியம்

 

திண்டிவனம், ஜூலை 17: பாட்டாளி மக்கள் கட்சியின் 35வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வரிடம் ஐந்து முறை பேசி உள்ளேன். விரைவில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.

மது மற்றும் புகையிலை இல்லாத தமிழகமாக மாற்றுவதே எனது லட்சியம். மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகமாகவும், ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் கலக்காமல் இருக்க வேண்டும் என வரம் கேட்பேன், என்றார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்