மது பாட்டில்கள் கடத்தல்

பாகூர், ஏப். 4: தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் தேர்தல் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு முள்ளோடை எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பிச் சென்றார். போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது, அதில் 90 மில்லி அளவுள்ள 59 மது பாட்டில், 180 மில்லி அளவுள்ள 5 மது பாட்டில்கள் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு