மது அருந்த பணம் இல்லாததால் வாகன பேட்டரி திருடி விற்ற 3 பேர் சிக்கினர்

பெரம்பூர்: கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மினிவேன்களில் இருந்து பேட்டரிகள் திருடு போவதாக, கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்தவகையில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு மினி வேனில் பேட்டரி திருடப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 3 இளைஞர்கள் இரவு நேரங்களில் வாகனத்தில் இருந்த பேட்டரியை திருடியது தெரிய வந்தது.

விசாரணையில், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த அசாருதீன் (32), கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த இணையதுல்லா (47), அதே பகுதியை சேர்ந்த கலீல் ஷெரிப் (37) ஆகிய 3 பேர், மினி வேன்களில் இருந்து பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, மது அருந்த பணம் இல்லாததால் பேட்டரிகளைத் திருடி, அதனை இரும்புக் கடையில் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு