மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

 

மதுரை, ஜூலை 20: மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள சிந்தடிக் ஆடுதளத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை ஐசிஎப் அணி 7க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை ஏஜிஓஆர்சி அணி 8க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணியை தோற்கடித்தது. கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் சென்னை போஸ்டல் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது. சென்னை சென்ட்ரல் எக்சைஸ் அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டிகள் தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

 

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை