மதுரை- தூத்துக்குடி இடையே மின் வழித்தடத்துடன் இரட்டை ரயில் பாதை பணி அடுத்தாண்டு முடிவடையும்: பாதுகாப்பு ஆணையர் தகவல்

தூத்துக்குடி: மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை 160 கிமீ தொலைவுக்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி திட்ட மதிப்பில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் முதல் தட்டாப்பாறை வரையில் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் வழித்தடத்தில் தட்டப்பாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை சுமார் 7.4 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கும் பணிகளை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், அதிகாரிகள் குழுவினருடன் நேற்று டிராலியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், மதுரை- தூத்துக்குடி இடையே இரட்டை ரயில் பாதை, மின்மயமாக்கும் பணிகள் அனைத்தும் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்