மதுரை, கோ.புதூரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: கோ.தளபதி எம்எல்ஏ துவக்கினார்

 

மதுரை, நவ.5: மதுரை கோ.புதூர் லூர்துநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை கோ.தளபதி எம்எல்ஏ துவக்கி வைத்தார். மதுரை, கோ.புதூர் லூர்து நகர் பகுதியில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோ.தளபதி எம்எல்ஏ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை துவக்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில், அவ்வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூன்று சக்கர சைக்கிளில் போர்வை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை அழைத்து போலீஸ் கமிஷனர் எங்கே தங்கி இருக்கிறீர்கள், எத்தனை பேர் வந்து உள்ளீர்கள் என விசாரணை நடத்தினார். அப்போது அவர் கமிஷனரின் கேள்விகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை. மேலும் அவரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை. இதனையடுத்து மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி விற்பனைக்காக வந்துள்ள வட மாநிலத்தவர் குறித்த விபரங்களை சேகரிக்கவும், அவர்கள் எத்தனை பேர் வந்துள்ளனர், தங்கியுள்ள இடம் மற்றும் அவர்களின் சொந்த முகவரி குறித்த விபரங்களை பெறவும் காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை