மதுரை உட்பட 6 மாவட்டங்களில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை உட்பட 6 மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக பகலில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. சுமார் 101 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அதே நேரம் பெண்கள் உள்ளிட்டோர் வீடுகளை விட்ட வெளியே தயங்கினர். இந்நிலையில், வானிலை மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று பகலில் மதுரையில் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மாலையில் வானம் கருத்த மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான குளிர்ந்த காற்றும் பரவி வீசியது. தொடர்ந்து கருமேகங்கள் சூழ மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பல இடங்களில் சில மணி நேரங்கள் இந்த சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. சுட்டெரிக்க துவங்கிய கடும் கோடையின் வெப்பத்தை தணித்திட சற்றே ஆறுதல் அளித்திடும் வகையில் பெய்த இந்த சாரல் மழையை பொதுமக்கள் ரசித்தனர். அருவிகளில் தண்ணீர் கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். நேற்று மாலை முதல் கொடைக்கானலில் மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி இருந்த நிலை மாறி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற தண்ணீர் கொட்டுகிறது. இதை கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோல் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது….

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!