மதுரை – அழகர்கோவில் சாலை விரிவாக்கம் ரூ.4 கோடி பணிகள் துவக்கம்

மதுரை, ஜூன் 18: மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் சாலை, ரூ.4 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மதுரை, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து அழகர்கோவில் வரையிலான சாலை, 21 கி.மீ தூரம் கொண்டது. இரு வழிச்சாலையான இதில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், பல்வேறு கட்டங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக அப்பன்திருப்பதி பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் துவக்கினர். இதன்படி, அப்பன்திருப்பதியில் ஒரு கி.மீ தொலைவிற்கு சாலையின் இருபுறமும் 14 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ரூ.4.25 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகள் முடிந்தால், அழகர்கோவில் சாலையில் கள்ளந்திரி வரை நான்கு வழிச்சாலையாக விரிவடையும். இப்பணிகள் 20 நாட்களுக்குள் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை