மதுரையில் 3வது திருமணம் செய்ய முயன்றதை தட்டி கேட்ட மனைவி கொலை: கணவர், நண்பர்கள் கைது

 

மதுரை, செப்.15: மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூரில் உள்ள கிணற்றில் சில தினங்களுக்கு முன்பு 2 சடலங்கள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், அதில் ஒருவர் 6 மாதத்திற்கு காணாமல் போன குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பூவலிங்கம் என்பது தெரியவந்தது. மற்றொரு பெண் சடலம் குறித்து விசாரித்தததில் 3வது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை கணவன் கொன்று கிணற்றில் வீசியது தெரிந்தது. குன்னத்தூரை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி (26) மெக்கானிக். இவரது மனைவி ஐஸ்வர்யா (21). அலெக்ஸ்பாண்டி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது மதுரையில் காப்பகம் ஒன்றில் தங்கி படித்த திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைத்தது. பிறகு நட்பாகி இருவரும் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு மதுரை வில்லாபுரத்தில் வசித்தனர். இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யாவை சந்திப்பதை அலெக்ஸ்பாண்டி தவிர்த்தார். இதனால் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா விசாரித்ததில் மூன்றாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய அலெக்ஸ்பாண்டி முயன்றது தெரிந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யாவை அடித்து கொன்று, சடலத்தை கிணற்றுக்குள் வீசி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அலெக்ஸ்பாண்டி, உடந்தையாக இருந்த நண்பர்கள் கார்த்திக் பிரகாஷ் (19), ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்து, மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்