மதுரையில் 21 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

மதுரை, செப். 6: மதுரை அனுப்பானடி ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தெப்பக்குளம் காவல் நிலைய எஸ்ஐ சுந்தரபாண்டியனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதர் ஒன்றில் சந்தேகப்படும் வகையில் 3 பேர் இருந்தனர். போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மதுரையை சேர்ந்த நவீன்குமார் (23), சரவணன் (24), சஞ்சய் குமார் (20) என்பது தெரிந்தது. தொடர் விசாரணையில் 3 பேரும் வேல்முருகன் என்பவரிடம், 25 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்ததும், அதில் 4 கிலோ கஞ்சாவை விற்று கிடைத்த பணத்தை செலவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை