மதுரையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி நடந்து வருகிறது. 20 லட்சம் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதனையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் பழமையானதாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மதுரை நகரையும் கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகள் விரிந்து போய் மொத்தமும் மதுரையாகவே இப்போது மாறிப்போயிருக்கிறது. பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக மட்டுமே தற்போது வரை இருந்து வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பல்வேறு தரப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த 2-வது பெரிய மாநகரமாக மதுரை இருக்கிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக போக்குவரத்து நெருக்கடியாலும், பெருமளவில் மதுரை நகர் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் இந்த திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் செய்து வருகின்றன. இது தொடர்பாக பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மதுரையில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். …

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!