மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்: திமுக வேட்பாளர் மலர்விழி குமார் பேச்சு

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில்  நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள்  நகரமன்ற தலைவருமான மலர்விழி குமாரை  ஆதரித்து  தேர்தல் பொறுப்பாளர்கள் லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், காஞ்சி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு வே.ஏழுமலை ஆகியோர் நேற்று அப்பகுதி பெண்களுடன் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் மலர்விழி குமார் பேசுகையில், பாலாற்றில் இருந்து மதுராந்தகம் நகரத்துக்கு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். மதுராந்தகம் நகரத்திற்கு அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என உறுதியளித்ததார். தொடர்ந்து, மதுராந்தகம் நகராட்சி 20வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சசிகலாதேவியை, 4வது வார்டு திமுக வேட்பாளர் அர்ஜுனன் ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். இதில், 2வது வார்டு திமுக வேட்பாளரும் நகர செயலாளருமான கே.குமார்.    மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஏமநாதன், மாவட்ட பிரதிநிதி காந்த், விவசாய அணி துணை அமைப்பாளர் எஸ் குணசேகரன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கலைமணி, சுகுமார் உள்பட பலர்  பங்கேற்றனர்….

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்