மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

 

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சமயமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட திட்ட அலுவலர் இந்துபாலா, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சியில் நடைபெற்று வரும் பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டுமான பணியினை பார்வையிட்டார். ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இந்த வீடுகளை தரமானதாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது, புக்கத்துறை ஊராட்சி மன்ற தலைவர் சொரூபராணி எழிலரசு, துணைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து சூரை மற்றும் பையம்பாடி கிராமங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் முக்கிய நிகழ்வாக சுமார் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாருதல் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் செல்வகுமார், சுப்பிரமணி, பொறியாளர் பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு நடைபெற்று வரும் ஏரியின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளை முடிப்பதற்காக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து