மதுராந்தகம் அருகே பரபரப்பு வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

மதுராந்தகம், மார்ச் 7: மதுராந்தகம் அருகே சாலை பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோர்ட் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேன் ஒன்று, 15 பயணிகளுடன் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு