மதுராந்தகத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

 

மதுராந்தகம்: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி வீதியில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர்வாணன், தயாநிதி, பொய்யாமொழி, இமயவளவன், முகிலன், பேரூர் செயலாளர் காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் கிட்டு பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விசிக துணை பொது செயலாளர் எழில் கரோலின், பாலாஜி எம்எல்ஏ, மதிமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் அந்தரிதாஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இமயா கக்கன், சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, மனிதநேய மக்கள் கட்சி ஷாஜகான்,

மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், பேரறிவாளன், மாநில துணை செயலாளர் அன்புச்செல்வன், செயற்குழு உறுப்பினர் அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டு வெல்லும் ஜனநாயக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேசினர்.
முடிவில், நகர இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு