மதுபோதையில் கடையை சேதப்படுத்திய வாலிபருக்கு வலை

 

பாலக்காடு,அக்.6: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் ஆர்.எஸ்., சாலையில் தட்டுக்கடை நடத்துபவர் சுதீர். இவர் இல்லாத நேரங்களில் தொழிலாளி கடையை கவனித்து வந்துள்ளார். கடந்த திங்களன்று இரவு தொழிலாளரை கவனிக்கச் சொல்லி சுதீர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி புகுந்து கலட்டா செய்துள்ளார். தொழிலாளர் கடையில் உணவுகள் முடிந்து விட்டது. பக்கத்திலுள்ள கடைக்குச் சென்று சாப்பிடுமாறு கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வாலிபர் ஆத்திரமடைந்து கடை ஊழியரை அடித்து காயப்படுத்த முற்பட்டுள்ளார். இதனால் தொழிலாளி அக்கம்பக்கத்து கடைக்குள் நுழைந்து உயிர்தப்பினார். இந்நிலையில் குடிப்போதையில் வாலிபர் தட்டுக்கடையை அடித்து நொறுக்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி விட்டு ரயில் மூலமாக தப்பிவிட்டார். கடையை சேதப்படுத்திய வாலிபரை கைது செய்ய வேண்டும் என கடை உரிமையாளர் சுதீர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனை பரிசீலனை செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி.,கேமிரா மூலமாக வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்