மதவாத வெறுப்பை தூண்டும் விதமாக டிவிட்டரில் பதிவிட்ட பாஜ பெண் நிர்வாகி கைது

சென்னை: மதவாத வெறுப்பை தூண்டும் விதமாக டிவிட்டரில் பதிவு செய்த பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார்.  தமிழக பாஜ செயற்குழு உறுப்பினரான சவுதாமணி கடந்த ஜனவரி மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில் மதவாத வெறுப்பை தூண்டும் விதமாக ஒருவர் பேசிய காணொலியை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சவுதாமணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சவுதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  இதைதொடர்ந்து சவுதாமணியை நேற்று சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு