மதசார்பற்ற கொள்கையை பிரதமர் மோடி கடைபிடிக்கவில்லை: வயநாட்டில் காந்தி சிலை திறந்து வைத்து ராகுல் காந்தி பேச்சு

வயநாடு: மதசார்பற்ற கொள்கையில் பிரதமர் மோடி சொல்வது போன்று செயல்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக இருப்பவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அடிக்கடி அவர் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வது வழக்கமாகும். அதன்படி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கேரளாவுக்கு வந்தார். அப்போது கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மானந்தவாடியில் உள்ள மகாத்மா காந்தி சிலையை பிற்பகல் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; அனைத்து மதத்தினரையும் காந்தி சமமாக நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்; மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். மேலும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறிய அவர் பெண்களை மரியாதையுடன் நடத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார். இன்று நம்மிடையே இருக்கும் பலர், நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள், பின்னர் அவர்களே மற்றவர்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள். பெண்களை மதிக்கும் இந்தியா வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்களே பெண்களை மதிக்கவில்லை. அவர்கள் ஒரு மதச்சார்பற்ற தேசத்தை விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அவர்களே மதங்களை வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள். மேலும் ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வயநாடு மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை மலப்புரம் மாவட்டத்தில் தனது தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னித்தலா, சுதீரன் உள்பட மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தீர்மானித்து உள்ளார்….

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு