மண் பரிசோதனைக்கு பிறகே கட்டிட அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 19ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டிடம் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் ரூ.114.48 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு 18 மாதங்களில் கட்டப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். பொதுவாக வட மாவட்டங்களில் கட்டங்கள் விரைந்து கட்டி முடிக்கப்படுவதற்கு மண்ணின் தரம் உறுதியாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் மண் சற்று தளர்ந்திருக்கும். இப்புதிய கட்டடத்தில 35 துறைகளும், பல்வேறு துணை மற்றும் சார்பு துறைகளும் என 60க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம் மற்றும் 7 அடிக்குமாடி தளங்கள் கட்டப்படவுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 26,024 சதுர.மீட்டரும், 2,80,018 சதுர அடி ஆகும். மொத்தமுள்ள 21.17 ஏக்கர் பரப்பளவில் 15.24 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு தோற்றம் மற்றும் ஆர்க்கிடேக்சர் வரைபடத்தை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். அதன்படி முகப்பு தோற்றம் அமையவுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட தலைநகரம் மற்றும் திருவாரூர் மாவட்ட தலைநகரம் ஆகிய இரண்டையும் இணைக்கும் 36 கி.மீ தூரம் உள்ளது. சென்னை-கன்னியாகுமரி சிறப்பு திட்டத்தில் இரண்டு மாவட்டங்களையும் இணைக்ககூடிய (மயிலாடுதுறை –  திருவாரூர்) நான்கு வழி சாலை அமைக்க டெண்டர் கோரப்படவுள்ளது. இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் கோரப்படும். ஒரு டெண்டர் ரூ.105 கோடி மதிப்பீட்டிலும், மற்றொன்று ரூ.103 கோடி மதிப்பீட்டும் நிர்ணனயம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலை பணிகளை விரைவுபடுத்த நிலம் கையகப்படுத்தவுள்ளோம். இத்திட்டத்திற்க்கு இதுவரை 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைப்பட வேண்டும் என்பதற்காக ஒப்பந்தாரர்களுடன் கூட்டம் நடத்தினேன். தரமான சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் எப்போது வெளிஊர்களுக்கு சென்றாலும் எனது வாகனத்தில் குவாலிட்டி கன்ட்ரோல் பரிசோதனை செய்யும் இயந்திரம் வாகனத்தில் இருக்கும். நேற்று சென்னையிலிருந்து சாலை வழியாக வரும்போது உளுந்தூர்பேட்டை, பெரம்பளூர் வரும் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தேன். இரவு 7 மணியளவில் அரியலூர் மாவட்டம் திருமானூர் பாலம் கட்டும் பணிகளை தரமாக கட்டப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தேன். இன்று காலை மயிலாடுதுறை வருவதற்கு 3 கி.மீ தூரத்திற்க்கு முன்பு அனைத்து சாலைகளும் செப்பணிப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தேன்.1954ம் ஆண்டு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான ஆய்வுகம் உள்ளது. அதேபோல் பொதுபணித்துறைக்கும் சொந்தமான ஆய்வுகம் உள்ளது. 48 கிரேடு சிமென்ட் என்பதை மாற்றி 53 கிரேடு சிமேன்ட் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கட்டம் கட்டுவதற்க்கு முன்னாள் கட்டத்தின் மண் பரிசோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை, எம் சாண்ட் பரிசோதனை போன்ற பரிசேதனைகள் செய்யப்பட்ட பின்னரே கட்டம் கட்ட அனுமதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கும் வரை சிறப்பாக கட்டி முடிக்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வேன். இவ்வாறு கூறினார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி