மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூலை 2: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை சிறப்பு துணை தாசில்தார் கோகுலக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், வேட்டியம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி டிரைவர், அதிகாரிகளை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு, கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். அதிகாரிகள் அந்த லாரியில் சோதனை செய்தபோது, 3 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து, டவுன் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர், டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், டேம்ரோடு அருகே முத்துராயன்கொட்டாய் என்னுமிடத்தில் நின்றிருந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில், மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை