மண்டல முதுநிலை மேலாளர் ஆய்வு

தர்மபுரி, செப்.17: தர்மபுரி நகர மையப்பகுதியில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இம் மைதானத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், தடகள பயிற்சி மையம் உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும் உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. இறகுபந்து, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கிய மாவட்ட விளையாட்டு மைதானமாக தர்மபுரி உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலைமேலாளர் சுஜாதா தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். ஓடுகளம், தடகள பயிற்சி மையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்