மண்டபம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தல்

மண்டபம்: மண்டபம் பகுதி மீனவர் சங்க பிரதிநிதிகள் மீன்வளத்துறை அமைச்சரிடம், மண்டபம் துறைமுக பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். மண்டபம் பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், மண்டபம் வடக்கு கடல் டி.நகர் முதல் மீன்வளத்துறை டாப்கோபெட் டீசல் பங்க் வரை தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைத்தோம். ரூ.50 கோடி தேவைப்படும் இப்பணிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சிய நிதி ரூ.25 கோடியை மீனவர் நலன் கருதி விரைவாக பெற்றுத் தரவேண்டும். மண்டபம் பகுதியில் வடக்கு,கோவில்வாடி ஆகிய கடலோர பகுதியில் 425 விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதில் கோவில்வாடி மீன் இறங்குதளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் 125 விசைப்படகுகள், 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இயற்கை பேரிடர் காலங்களில் படகுகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை