மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமூக அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பின்படி ரூ.2 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே 2021-2022ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெருங்கடன், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள், சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்கு பெறுதல் ஆகிய நடவடிக்கைகள் தொகுத்து மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடம் மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய  அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு