மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூலை 26: மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பாஜ அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நேற்று கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் தலைமை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் பத்மா, ஜெயா, முன்னாள் எம்எம்எல்ஏ வேடம்மாள், மாவட்ட துணை செயலாளர் ரேணுகா, அமிர்தா முன்னிலை வகித்தனர்.

கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக மகளிரணி மாநில துணை அமைப்பாளர் ரேகா பிரியதர்சினி கலந்து கொண்டு பேசுகையில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. தமிழக முதல்வரால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். மணிப்பூர் சம்பவத்திற்கு எதிராக அதிமுக குரல் எழுப்பவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை கை நீட்டுகிறாரோ, அவர் தான் பிரதமர் ஆவார். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து திமுக ஆட்சியில் இருக்க வேண்டும். இந்த கூட்டம், மழை கொட்டித் தீர்த்தாலும் கலைந்து போகும் கூட்டம் அல்ல. தலைவர் தலைமையில் ஒன்றுகூடி நிற்போம். அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், கவுன்சிலர்கள் அல்லிராணி தங்கமணி, செல்வி சுருளி, சத்யா முல்லைவேந்தன், சமயா ராஜா, சின்னபாப்பா மாதேஷ், ராதா, கவிதா, சந்திரா, கனகா, சோனியா, சாந்தா, ரூபி, கங்கா, வசந்தி, பூங்கொடி, ராஜேஸ்வரி, பானுமதி, ரத்தினம், முருகம்மாள், தமிழ்பாவை, சசிகலா, அபிராமி, சாரதா, மகளிரணி தலைவி ராஜேஸ்வரி, மகளிர் தொண்டரணி தலைவி சிவகாமி, துணை அமைப்பாளர்கள் உண்ணாமலை, ஜோதி, ஜெயந்தி, தனலட்சுமி, அம்பிகா, கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குடை பிடித்தவாறு ஆயிர்ததிற்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை