மணிப்பூர் மாநில அரசை கலைக்க கோரி ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை23: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பஸ் ஸ்டாப் அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஜவகர்அலி தலைமை தாங்கினார். மாநகர துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார்.மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

இதில், மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி இன பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசையும், ஒன்றிய பாஜ அரசையும் கண்டித்தும், இந்த சம்பவத்தையொட்டி மணிப்பூர் மாநில அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர சிறுபான்மை பிரிவு தலைவர் மாப்பிள்ளை மீரான், துணை தலைவர் பாஷா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்