மணிப்பூர் சம்பவம்: ஒன்றிய அரசை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 23: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தபால்-தந்தி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க தவறிய ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜ அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், சரளா வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜ அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் வீனஸ் மணி, உமாபதி, ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, கோவை போஸ், தமிழ்செல்வன், இராம.நாகராஜ், இருகூர் சுப்பிரமணியம், சி.வி.சி.குருசாமி, சுரேஷ்குமார், தாமஸ் வர்க்கீஸ், காந்தகுமார், குறிச்சி வசந்த், கோட்டை செல்லப்பா, ஈஸ்வரமூர்த்தி, மதுசூதணன், திலகவதி, பட்டம்மாள், ரங்கநாதன், கணேசன், ஷேக்முகமது, முருகன், ஜேம்ஸ் ஜெயக்குமார், மோகன்ராஜ், பிரபு, நாகராஜ், அசோக்குமார், முஸ்தபா, ஆவின் சந்திரன், அஸ்மத்துல்லா, டென்னிஸ் செல்வராஜ், அமீன், நசீர், இஸ்மத், முத்துசாமி செட்டியார், ராகவன், முணுசாமி, ரங்கராஜ், ராமகிருஷ்ணன், சின்னசாமி, முரளி, சந்தோஷ், ரமேஷ், எப்.சி.ஐ.தண்டபாணி, நாராயணன், ஸ்ரீதரன், தமிழ்மணி, சகாயராஜ், மோகன்ராஜ், தம்பு, மருதூர் செல்வராஜ், சிங்காரவேல், ஜெகதீஸ் பிரிட்டோ, திலகவதி, மாலதி, லீமா ரோஸ், அபு, சுதன், சிவபெருமாள், பூபதி, பி.எஸ்.குமார், ரங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்