மணல் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி. இவர் சொந்தமாக  லாரி மூலம் மணல் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள்(50) என்பவர் இவரிடம் டிரைவராக வேலை செய்து வருகிறார். கிளீனராக தட்சிணாமூர்த்தி(45) என்பவர் உள்ளார். இந்நிலையில், இவர்கள் நேற்று முன்தினம் இரவு மணலை ஏற்றிக்கொண்டு சென்னை மயிலாப்பூர் பகுதிக்கு செல்வதற்காக வந்தனர். அமைந்தகரை மேம்பாலத்தில்  லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  கவிழ்ந்து கிடந்த லாரியை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும், சாலையில் கொட்டிய மணலை உடனடியாக அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தனர். இதுசம்பந்தமாக, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு