மணல் லாரிகள் பறிமுதல்

 

திருப்புத்தூர், ஜூன் 19: திருப்புத்தூர் தம்பிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அரசு அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரிகளை கனிம வள அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித்தின் உத்தரவின் பேரில், புவியியல் மற்றும் கனிம வள பொறியாளர் ஜெகதீசன் தலைமையில், கனிம வள அலுவலர்கள் நேற்று மாலை திருப்புத்தூர் தம்பிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருமயத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்தும், மானாமதுரை அருகே குருந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த மலைகண்ணன் மகன் மதன்ராஜ்(29) என்பவரையும் கைது செய்து திருப்புத்தூர் நகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை