மணப்பாறை அருகே சித்தாநத்தத்தில் வயல்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு-விவசாயிகள் வரவேற்பு

மணப்பாறை : மணப்பாறை அருகே வயல்களுக்கு அதிநவீன ட்ரோன் கருவி மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் நேற்று அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதி நவீன் ட்ரோன் மூலம் வயல்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. தற்போது உள்ள சூழ்நிலையில் நாளுக்கு நாள் விவசாயம் குறைந்து வருகிறது. மேலும் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் பல்வேறு விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தை மனை பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் அழிந்து விடக்கூடாது என்றும் விவசாயத்திற்கு என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்பதை கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். மேலும் விவசாயத்தை சிறப்பான முறையில் செய்திட , விவசாய கருவிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், பல வேலைக்கு குறிப்பாக மருந்துகள் தெளிக்க ஆட்கள் தேவை என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில், சித்தாநத்தத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் நெல் வயலில், சிறிய ரக வானூர்தி மூலமாக மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி அவரது விவசாய நிலத்தில் நடைபெற்றது.ஜிபிஎஸ். கருவி மூலமாக விவசாய நிலங்களின் எல்லைகள் அளந்து, அதற்குட்பட்ட பகுதியில் உள்ள உளுந்து, எள், மிளகாய் செடி, தக்காளி செடிகள் மீது மருந்துகள் சிறிய பறக்கும் விமானம் மூலமாக தெளிக்கப்பட்டது.இதனை சித்தாநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். முன்னதாக, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி டீன் மாசிலாமணி, ட்ரோன் செயல் விளக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்….

Related posts

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி

செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் தொடக்கம்..!!