மஞ்சகம்பை நாகராஜர் கோயிலில் ஆடி அமாவாசை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 

மஞ்சூர், ஜூலை 18: மஞ்சகம்பை நாகராஜர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மஞ்சகம்பையில் ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் கோயில்கள் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி அமாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நாகராஜர், ஹெத்தையம்மன் ஆகியோருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில், நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இதே போல் மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிசேகங்களுடன் சிற்ப்பு பூஜைகள் நடைபெற்றது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை