மசாஜ் சென்டர்களில் பாலியல் புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசுக்கும் அதிகாரம்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பாலியல் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 2021ல் வழக்கப்பட்ட இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் போலீசார் தலையிட முடியாது. சோதனையின்போது போலீசார் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. பாலியல் தடுப்பு சிறப்பு அதிகாரிக்குதான் சோதனை நடத்த உரிமை உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு இல்லை என்று வாதிட்டார். போலீஸ் தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஏற்கனவே இதுபோன்ற சோதனைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை. சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது.காவல் துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் குற்றவாளி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் முடிவு செய்ய முடியும். கடந்த 1987ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய  அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது. நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் போலீஸ் தலையிடாது. ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி அபலை பெண்களை பாதுகாக்க நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை