மங்களம் அம்மன் கோயில் வருடாபிஷேகம்

சாயல்குடி, செப்.6: மங்களம் பாலதேவதை அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலதேவதை வில்வஜோதிஅம்மன், கிருஷ்ணாம்பிகை, கருப்பணசாமி மற்றும் பரிவார, கிராம தேவதைகளுக்கு 2ம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி நேற்று கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.

வேத மந்திரங்களுடன் சாமி விக்கிரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபராதணைகளும் நடந்தது. நிகழ்ச்சியில் பாலதேவதை அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், எம்.கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து, கோயில் நிர்வாகி ராமமாரி மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை