மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை மோடி விரும்புகிறார்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு

சென்னை: மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை மோடி விரும்புகிறார் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக பாஜ சார்பில், ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று  நடந்தது. தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். ஒன்றிய ஜவுளி மற்றும் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்  பியூஷ் கோயல் பங்கேற்று ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு ரூ.2 லட்சம் மதிப்பிலான  ஆயுள் காப்பீடு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:தமிழக மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகின்றனர். பிரதமர் மோடி மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை விரும்புகிறார். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் உணவு தேவைக்காக உணவு பொருட்களை பிரதமர் வழங்கியுள்ளார். தற்போது வரை அந்த திட்டங்கள் தொடர்கின்றன. வீடு இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு  ரூ.3 கோடி வீடுகளை கட்டி கொடுத்து அவர்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் தமிழகத்திற்கும் சேர்த்தே செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய செய்யாமல் தடை செய்யப்படுகிறது. ஏழைகளுக்காக ஒன்றிய அரசு அனுப்பி வைக்கும் நல்ல அரிசியை தராமல், தரமற்ற அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை