மக்கள் வலியுறுத்தல் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தொழிற்பயிற்சி கலெக்டர் தகவல்

கரூர், ஜன. 10: கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. பட்டயப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி, எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி, என்டிடிஎப் நிறுவனத்தில் வேலை பெறலாம். இந்த பயிற்சியில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படடப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்டரிக் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 முதல் 26 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ 16 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் பொறியியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 21ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெறலாம். மேலும், புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சியை பெற (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை