மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் சொத்து மதிப்பு ரூ160 கோடி

கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மகேந்திரன் தனது சொத்து மதிப்பு ரூ.160 கோடி என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2.67 கோடி வருமானமும், மனைவி அபிராமி பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.9 கோடியும், தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமும் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது கையிருப்பாக ரூ.2.10 லட்சமும், மனைவியிடம் ரூ.65 ஆயிரம், பல்வேறு வங்கிகளில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 63 ஆயிரத்திற்கு வைப்பு தொகை மற்றும் பங்கு பத்திரங்கள், ரூ.2.7 கோடி சேமிப்பு பத்திரங்கள், ரூ.2.85 கோடி மதிப்புள்ள 2 சொகுசு கார்கள், ரூ.1 கோடியே 59 லட்சத்து 77 ஆயிரத்து 868 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மனைவி பெயரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், வேட்டைக்காரன்புதூரில் 44.52 ஏக்கர் நிலம், கட்டுமானத்துறையில் ரூ.76 லட்சத்து 11 ஆயிரத்திற்கு முதலீடு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.12 கோடியே 13 லட்சத்து 17 ஆயிரம் என்றும் தெரிவித்துள்ளார். வேட்டைக்காரன்புதூரில் ரூ.1 கோடியே 49 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 5.48 ஏக்கரில் விவசாய நிலம், காபுளிபாளையத்தில் ரூ.16 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்….

Related posts

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்