மக்கள் நாடாளுமன்றம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரிய வெப்பத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்றம் நடத்தப்பட்டது. கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சபாநாயகராகவும், பிற உறுப்பினர்கள் என்று மாதிரி நாடாளுமன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண்திருத்தச் சட்டங்களின் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் உறுப்பினர் ஒருவர் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை அனைவரும் முன்மொழிந்து பேசினார். இதில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று வேளாண் திருத்த சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  …

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு