மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளும் அடுத்த ஆண்டே இந்தியா நம்பர்-1: ஐநா அறிக்கை

ஐநா சபை: ‘அடுத்த ஆண்டுக்குள், மக்கள் தொகை எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்தி நம்பர்-1 இடத்தை பிடிக்கும்’ என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாத புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 790 கோடியாக உள்ளது. கடந்த சில நூற்றாண்டாக மக்கள் தொகை  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐநா அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடியாக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.6  கோடியாக உள்ளது. அடுத்தாண்டு (2023) மக்கள் தொகை எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்தும். மேலும், 2050ம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 166.8 கோடியாக உயருமெனவும், அப்போது சீனாவின் மக்கள் தொகை 131.7 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் அதிகரிக்கும் உலக மக்கள் தொகையில் பாதி அளவானது இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் தான் இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.* குடும்ப கட்டுப்பாட்டில் பாரபட்சம் கூடாதுமக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. மக்கள் தொகை விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது’’ என குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து சூசகமாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.* கடுமையான சட்டம்ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘‘கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவிடம் இந்தியா தோற்று விட்டது. ஆனால் மக்கள்  தொகை வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தி விட்டது. இனியும் ஒருவரே 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. எனவே மக்கள் தொகை  பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்….

Related posts

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!