மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள்: கலெக்டர் பெற்றுக்கொண்டார்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் த.பிரபுசங்கர் பொது மக்களிடமிருந்து 415 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுபிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 415 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 125 மனுக்களும், சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக 78 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 98 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 84 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 30 மனுக்களும் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்