மக்கள் குறைதீர் கூட்டத்தில் 491 மனுக்கள் குவிந்தன

 

நாமக்கல் ஏப்.25: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, 491 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட அளவில் சிறந்த 2 ரேஷன் கடை விற்பனையாளர்கள், 2 எடையாளர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் காசோலை, கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, மடக்கு சக்கர நாற்காலி என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹16,980 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வகுமரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை