மக்களுடன் முதல்வர் முகாம்

 

ஊத்தங்கரை, ஜூலை 17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு ஒன்றிய துவக்க பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரப்பட்டு, கதவணி, கருமாண்டபதி, உப்பாரப்பட்டி, கெங்கபெராம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் முகாமில் கலந்து கொண்டு 850க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். முகாமில் எரிசக்தி துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி, நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், மகளிர் உரிமை துறை ஆதிதிராவிடர் பிற்பட்டோர் நலத்துறைகள் வாழ்வாதார கடன் உதவிகள் என பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு, பொது மக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சி செயலாளர் ஆப்தாப் பேகம், உதவி இயக்குனர் ஊராட்சிகள் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி, தாசில்தார் திருமால், வட்டார கல்வி அலுவலர் லோகேஷ், திமுக நகர அவைத் தலைவர் தணிகைகுமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காரப்பட்டு ரமாதேவி கோவிந்தன், உப்பாரப்பட்டி தமிழ்ச்செல்வி செல்வகுமார், கதவனி காந்திலிங்கம், கெங்கபெராம்பட்டி வெங்கடேசன், கருமண்டபதி அருள், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்திய நாராயண மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி இதய நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்