மக்களுடன் முதல்வர் முகாம்களில் 34,576 மனுக்கள் பெறப்பட்டன

 

திருப்பூர், ஜன. 19: திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 34 ஆயிரத்து 576 மனுக்கள் பெறப்பட்டது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) வார்டு வாரியாக துறைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற 71 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராச்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, கூட்டுறவுத்துறை, போலீஸ் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளில் சார்பில் இம்முகாமின் மூலம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுகள் மீது பரிசீலினை மேற்கொண்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். திருப்பூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடைபெற்ற 71 முகாம்களில் 34 ஆயிரத்து 576 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி