மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் விண்ணப்பித்த உடனே வீட்டிற்கு உடனடி மின் இணைப்பு

 

கொள்ளிடம், ஜூலை 31: கொள்ளிடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி, கூத்தியம்பேட்டை ஊராட்சி மற்றும் ஓதவந்தான்குடி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை திட்ட துணை ஆட்சியர் கீதா தலைமையேற்று துவக்கி வைத்து பேசினார்.

ஒன்றிய ஆணைய தியாகராஜன் வரவேற்றார். வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயபாரதி முன்னிலை வகித்தனர். முகாமில் வருவாய் துறை,ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத் தறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட 19 துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.சில மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜ், பவானி இளங்கோவன், சிவக்குமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி