மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம், ஜூலை 29:சேலம் மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடப்பதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை செம்மைப்படுத்தி விரைவாகவும், எளிதாகவும் வழங்கிட “மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் நடந்து வரும் இம்முகாம், 12ம் நாளாக நாளை (30ம் தேதி) 5 இடங்களில் நடத்தப்படுகிறது.

இதன்படி, வாழப்பாடி ஒன்றியத்தில் காட்டுவேப்பிலைப்பட்டி, வேப்பிலைப்பட்டி, குமாரபாளையம், திருமனூர், தேக்கல்பட்டி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காட்டுவேப்பிலைப்பட்டி வசந்த மஹாலிலும், ஓமலூர் ஒன்றியத்தில் கோட்டைமாரியம்மன் கோயில், தாதியம்பட்டி, புளியம்பட்டி, பல்பாக்கி, எம்.செட்டிப்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நல்லம்மாள் கோட்டமாரியம்மன் கோயில் பனங்காடு திருமண மண்டபத்திலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் சூரப்பள்ளி, சாணாரப்பட்டி கிராம மக்கள் பயன்பெறும் வகையில்
ஆட்டுகாரன்வளவு  ராமலிங்க கிருஷ்ணவேனி அம்மாள் திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் மேட்டுடையார்பாளையம், பேளூர் கரடிப்பட்டி, ஏ.கொமாரபாளையம், கல்லேரிப்பட்டி, கொட்டவாடி, பனைமடல், கல்யாணகிரி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பனைமடல் ரைஸ் மில் பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜயதாரணி திருமண மண்டபத்திலும், கெங்கவல்லி ஒன்றியத்தில் மண்மலை, தகரப்புதூர், கொண்டையம்பள்ளி, பச்சமலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தகரப்புதூர் ரெட்டியார் திருமண மண்டபத்திலும் முகாம் நடக்கிறது. எனவே, இம்முகாம்களை அந்தந்த பகுதி மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது