மக்களின் தேவைகளை நிறைவேற்றி தருவதால் உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலில் தொடங்கி, சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், பொது சுகாதாரம், குடிசைகளை மாற்றி வீடு கட்டித் தருதல், வறுமை ஒழித்தல், வீடுகளுக்கு குடிநீர் வழங்குதல் உட்பட 18 வகையான பணிகளை விதிகளுக்கு உட்பட்டு நகராட்சி அமைப்புகளே செயல்படுத்திக் கொள்ளலாம். பாமகவை சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து பயிற்சி அளித்திருக்கிறோம். உள்ளாட்சிகளில் உண்மையான மக்களாட்சியை பாமகவினர் ஏற்படுத்துவர்கள்.உள்ளாட்சி அமைப்புகள் நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்வதற்கான அமைப்புகள். உங்கள் தெருவைச் சேர்ந்தவர்களோ, உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரரோ வெற்றி பெற்று பதவிக்கு வருவது உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் தான் சாத்தியமாகும். நம்மில் ஒருவரை உள்ளாட்சி அமைப்புக்கு தேர்ந்தெடுத்தால் மட்டும் தான் நமக்கான உரிமைகளை அவர்களிடமிருந்து கேட்டுப் பெற முடியும். மக்களவைத் தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் கடந்து உள்ளாட்சித் தேர்தல்கள் தான் மிகவும் முக்கியமானவை. அது தான் மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றி வைக்கும் அதிகாரம் கொண்டவை. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்